’நான் தென் இந்திய சினிமாக்களை அவ்வளவாக விரும்பி பார்ப்பதில்லை’ – நவாஸ்சுதீன் சித்திக்
Actor Nawazuddin Siddqui
பாலிவுட் நடிகர் நவாஸ்சுதீன் சித்திக் ‘நான் அவ்வளவாக தென் இந்திய சினிமாக்களை விரும்பி பார்ப்பதில்லை’ என்று ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
தென் இந்தியாவில் ஒரு வெற்றிப்படம் வந்துவிட்டால், அடுத்தடுத்து அதே பாணியில் நாலைந்து கமெர்சியல் படங்கள் வரும். இதன் காரணமாகவே தென் இந்திய சினிமாக்களை நான் அவ்வளவாக விரும்பி பார்ப்பதில்லை என்று பாலிவுட் நடிகர் நவாஸ்சுதீன் சித்திக் தென் இந்திய சினிமாக்களின் மீது ஒரு விமர்சனத்தை வைத்து இருக்கிறார்.
“ வர வர தென் இந்திய சினிமாக்கள் உலக அளவில் தரமானதை வருவதைக் கண்டு பாலிவுட் வட்டாரம் சற்றே அதிர்ச்சி அடைந்து இருக்கிறது போல. ஆள் ஆளுக்கு தென் இந்திய சினிமாக்களை விமர்சனம் செய்து வருகின்றனர் “