5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம் – நயன்தாரா தரப்பு
இரட்டை குழந்தை சர்ச்சை விவகாரத்தில், ‘நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம்’ என நயன் – விக்கி தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது.
நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டதாக நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தத்தெடுப்பு என்பது நல்ல விடயம் தான் அதற்கான சட்ட திட்டங்களை எளிதாக்கினால் பலரும் பயன் பெறுவர்.
“ குழந்தை தத்தெடுப்பிற்கான சட்டங்களை கொஞ்சம் அரசே முற்பட்டு எளிமையாக்க வேண்டும். இல்லையெனில் இப்படி மனது இருப்பவர்களுக்கும் மனதே இல்லாமல் போய் விடும் “