தொடரும் மாளவிகா மோகனன் மற்றும் நயன்தாராவின் பேட்டி மோதல்!
மாளவிகா மோகனன் மற்றும் நயன்தாரா இடையே ஒரு சிறிய கருத்து மோதல் பேட்டிகளில் நிலவி வருகிறது.
மாஸ்டர் திரைப்படத்தின் நடிப்பிற்காக அதிகம் கலாய்க்கப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் ஆவார். ஆனால் அவரே ஒரு பேட்டியில் நயன்தாராவின் நடிப்பை கலாய்க்கும் வகையில் பேசவே, அதற்கு ரசிகர்கள் இணையத்தில் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். தற்போது நயன்தாராவும் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.
‘கமெர்சியல் படமாக இருந்தால் தான் என்ன ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து நடிகை மருத்துவமனை சீனிலும் மேக்கப் கலையாமல், லிப்ஸ்டிக் போட்டு தான் நடிப்பாரா?’ என மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இதை உற்று நோக்கிய நயன் ’இயக்குநர் சொன்னதை செய்தேன் இதில் என் தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை’ என கூறி மாளவிகா மோகனனின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.
“ நடிகர்களுக்குள் கருத்து மோதல் கேள்வி பட்டு இருக்கிறோம், முதன் முதலாக நடிகைகள் பேட்டிகளில் கருத்து மோதல் செய்வதை சில யுக காலங்களுக்கு பிறகு இந்த கோலிவுட் உணர்கிறது “