நயன்தாராவை பிரிகிறாரா விக்னேஷ் சிவன்? தீயாய் பரவும் புதிய சேதி!
Nayanthara Vigneshshivan Couple Seperated Fact Here Idamporul
சமூக வலைதளங்களில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி பிரிய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.
முதலாவதாக நயன்தாரா சமூகவலைதளங்களில் விக்னேஷ் சிவனை அன்பாஃலோ செய்து இருக்கிறார். அடுத்தபடியாக தனது பயோவில் இருந்த கம்பெனி பெயர்களையும் முழுமையாக நீக்கி இருக்கிறார். விக்னேஷ் சிவனும் ’Vignesh ShivN’ என வைத்து இருந்த பெயரை ‘Vignesh Shivan’ என மாற்றி விட்டு, இருவரும் இணைந்து இருப்பது போல் வைத்து இருந்த முகப்பு புகைப்படத்தையும் நீக்கி இருக்கிறார்.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு சேதி தீயாய் பரவி வருகிறது. ஆனாலும் கூட இருவரும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக இது குறித்து எதுவும் அறிவிக்காததால் இதன் உண்மை தன்மை குறித்து அறிய கொஞ்சம் பொறுத்து இருப்பது அவசியம் ஆகிறது.
“ இருவரும் பிரிவது உண்மையாக இருப்பின் அவர்கள் தத்தெடுத்த அந்த குழந்தைகள் என்ன ஆகும் என்ற கேள்வி தான் பலரும் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது, என்ன எதுவோ பொறுத்து இருந்து பார்க்கலாம் “