நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளை விசாரிக்க இருக்கும் சுகாதாரத்துறை!
குழந்தை தத்தெடுப்பது என்பது ஆகச்சிறந்த செயல் எனினும் அதற்கும் ஒரு சில விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை நயன் – விக்னேஷ் சிவன் தம்பதிகள் தெரியாமல் மீறி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இரட்டை குழந்தைகளுடன் போட்டோ பதிவிட்டு தங்களது மகிழ்வை வெளிப்படுத்தி இருந்தனர். திருமணமாகி 5 வருடங்கள் கழித்தே குழந்தையை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருப்பதால் அது சிக்கலாகி தற்போது சுகாதாரத்துறையின் விசாரணயில் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றனர் விக்னேஷ் – நயன் தம்பதிகள்.
“ தத்தெடுப்பதற்கான கட்டுப்பாடுகளை குறைத்தால் பெரும்பாலான தவிக்க விடப்பட்ட குழந்தைகளின் நலன் பேணப்படும். இங்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் போல எத்துனையோ நல்லுள்ளங்கள் இருக்க தான் செய்கிறது. கட்டுப்பாடுகளை குறைத்து தத்தெடுப்பதை அரசு நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும் “