அமீர்கான் படத்தை அடுத்து ஹ்ரித்திக் ரோஷன் படத்தையும் புறக்கணிக்கும் கூட்டம்!
Negative Trending For Hrithik Roshan Vikram Vedha
சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சட்டா படத்திற்கு ட்விட்டரில் ஒரு கூட்டம் ட்விட்டரில் எதிர்ப்பு ஹேஸ்டாக் போட்டு ட்ரெண்டிங் செய்து வந்தது. இந்த நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
சமீபத்தில் அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படம் நன்றாக தான் இருக்கிறது. அதை தியேட்டரில் சென்று பாருங்கள் என்று ஹ்ரித்திக் ரோஷன் அவர்கள் கருத்து கூறி இருந்தார். கருத்து சொன்னது குற்றம் என்று ஹ்ரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா ரீமேக்கிற்கும் அந்த கூட்டம் எதிர்ப்பு ஹேஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகிறது.
“ தொடர்ந்து வெளியாகும் அத்தனை பாலிவுட் திரைப்படங்களுக்கும் எதிர்ப்பு ஹேஸ்டாக்குகளை ரெடியாக வைத்து இருக்கிறதாம் அந்த கூட்டம், என்ன ஆக போகிறதோ பாலிவுட் “