‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லை – தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டம்
No Audio Launch For Beast Sun Pictures
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா வைக்கபோவதில்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லை என படக்குழு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
“ ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாலும், படத்தின் எதிர்பார்ப்பை மிகவும் அதிகரிப்பதாலும் தயாரிப்பு நிறுவனம் தவிர்த்து இருக்கலாம் என்று கருத்து வெளியாகி இருக்கிறது “