ஹப்பாடா! ஒரு வழியா ’பீஸ்ட்’ ட்ரெயிலர் அப்டேட் வந்தாச்சு!
Official Beast Trailer Update Is Announced
எப்பப்பா ட்ரெயிலர் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், பீஸ்ட் படக்குழு ஒரு வழியாக ட்ரெயிலர் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ஏப்ரல் 2 அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ டாக்டர் படம் போல டார்க் காமெடிலாம் இல்லை, படம் முழுக்க முழுக்க அதிரடி களம் தான் என்ற தகவல் வேறு கசிந்து இருப்பதால் ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர் “