விரைவில் நெட் பிளிக்ஸ் வலை தளத்தில் வெளியாக இருக்கும் பீஸ்ட்!
Beast On Net Flix
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் நெட் பிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாக இருக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்த போதும் கூட பிசினஸ் ரீதியாக நல்ல கலெக்சனை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் மே 11 அன்று நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் பீஸ்ட் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பெரும்பாலான தியேட்டர்களில் கே.ஜி.எப் 2 சூழ்ந்து விட்டதால் நெட்பிளிக்ஸ் வலை தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பீஸ்ட் திரைப்படத்தை நல்ல விலைக்கு விற்று இருக்கிறதாம் பீஸ்ட் படக்குழு “