நடிகர் சிலம்பரசனை பார்க்கும் போதெல்லாம் கேட்க துடிக்கின்ற ஒரே கேள்வி!

Why So Much Of Critics Around The Legend Actor Silambarasan TR Idamporul

Why So Much Of Critics Around The Legend Actor Silambarasan TR Idamporul

நடிகர் சிலம்பரசனை பார்க்கும் போதெல்லாம் கேட்க துடிக்கின்ற ஒரே கேள்வி, ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி என்பது தான்.

சிலம்பரசன் என்ற சிம்பு தனது ஒரு வயதிலேயே நடிப்பை துவங்கி விட்டார். அவரை பொதுவாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைப்பார்கள். ஆனால் அவருடைய பெரும்பாலான திறமைகள் உலகநாயகனுடன் ஒத்துப் போகும். சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்ததில் இருந்து, பாடல், எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்துலுமே கமல்ஹாசன் போல, நடிகர் சிலம்பரசனும் முத்திரை பதித்து வைத்து இருப்பார்.

இருந்தாலும் உலக நாயகன், உலகநாயகன் தான், சிலம்பரசன் சிலம்பரசன் தான். 1984 – யில் குழந்தை நட்சத்திரம், 2002 யில் முழு முதல் ஹீரோவாக முதல் திரைப்படம், என்று தனது சினிமா பயணத்தை துவங்கிய சிலம்பரசன், தற்போது வரையிலும் கூட கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகவே ஜொலித்து வருகிறார். சர்ச்சைகள் மட்டும் அவரை பின் தொடராமல் இருந்திருந்தால் இன்னும் இந்த சினிமாவிற்கு பல நல்ல படைப்புகளை கொடுத்து இருப்பார் என்றே தோன்றும்.

” தொடர்ந்து பல வெற்றி இயக்குநர்களை கையில் வைத்து இருக்கும் நடிகர் சிலம்பரசன், மீண்டும் கோலிவுட்டில் தான் இழந்த இடத்தை தன் பன்முக திறமையால் ஆட்கொள்வார் என நம்புவோம் “

About Author