‘பத்து தல’ ஆடியோ வெளியீட்டு விழா தேதி வெளியீடு!
Pathu Thala Audio Launch Update Idamporul
’பத்து தல’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் பாடலின் ஆடியோ வெளியீட்டு விழாவை, மார்ச் 18 அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் படக்குழு நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
“ ஆடியோ வெளியீட்டு விழா என்பது படத்தின் புரோமோசனில் தற்போதெல்லாம் பெரும் பங்கு வகிப்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போதெல்லாம் எல்லா படத்திற்கும் ஆடியோ வெளியீட்டு விழாவை கிராண்டாக அரங்கேற்றுகின்றனர் “