’மாமன்னன்’ திரைப்படத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு!
’மாமன்னன்’ திரைப்படத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஒரு சில சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. ஒரு வேளை படம் திரையிடப்பட்டால் அது இரு சமூகத்திற்கு இடையிலான பிரச்சினைகளாக மாறலாம் என்பதை கருத்தில் கொண்டு படத்திற்கு தடை கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலமனு ஒன்று தொடரப்பட்டு இருக்கிறது.
“ மாரி செல்வராஜ் தேவர்மகன் திரைப்படம் குறித்து பேசியதில் இருந்தே, மாமன்னன் திரைப்படத்திற்கு எல்லா பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. படம் நிச்சயம் நின்று பேசும் என்றாலும் ஒரு சில சமூக சர்ச்சைகளையும் தூண்டும் என்பதில் ஐயமும் இல்லை “