பிச்சைக்காரன் 3 திரைப்படத்தை உறுதி செய்தார் விஜய் ஆண்டனி!
Pichaikaran 3 Series Confirmed By Vijay Antony Idamporul
பிச்சைக்காரன் 3 திரைப்படத்தை உறுதி செய்து இருக்கிறார் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்த நிலையில், அதன் இரண்டாவது பாகத்தை தற்போது ரிலீஸ் செய்து இருந்தார். முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் கூட ஓரளவுக்கு ஓடியது என்னும் போது அடுத்ததாக பிச்சைக்காரன் 3 திரைப்படத்திற்கும் அடித்தளம் இட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி.
“ பொதுவாக தமிழைப் பொறுத்தவரை எந்த படத்தின் சீகுவல்களும் ஹிட் ஆனதே இல்லை, காஞ்சனாவை தவிர, அந்த ஒரு பிம்பத்தை பிச்சைக்காரன் 3 உடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “