பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் திருப்தி அளிக்கிறதா?

Ponniyin Selvan Teaser Is Out

Ponniyin Selvan Teaser Is Out

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய நிலையில் கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது தான் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன். நேற்று டீசர் வெளியாகி இருந்த நிலையில் டீசர் ஓகே தான் என்றாலும், 500 கோடிக்கும் மேலான செலவில் உருவாகி இருக்கும் ஒரு படத்தின் டீசரில் பாகுபலி, கே.ஜி.எப்-யில் கிடைத்த ஒரு பையர் பீல் மிஸ் ஆவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திரைக்கதை நிச்சயம் வென்றுவிடும், அதில் ரசிகர்களுக்கு எந்த ஐயமுமில்லை, ஆனால் காட்சியமைப்பு ரசிகர்களோடு ஒன்றுமா என்பது தான் ஐயமாக இருக்கிறது. காரணம் பாகுபலி, கே.ஜி.எப் என்று மிகப்பெரிய பிரம்மாண்டங்களை பார்த்துவிட்டு அதை போல இருக்க வேண்டும், அதை தாண்டி இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

“ என்ன இருந்தாலும் நம் தமிழர்களின் வீரத்தை பறை சாற்றும் படம் விட்டும் கொடுக்க கூடாது. அதே நேரத்தில் எதிர்பார்ப்பும் உச்சமாக இருக்கிறது. வெற்றி பெற வைப்போம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் “

About Author