ரீமேக் படம் ஒன்றில் சல்மான் கானுக்கு ஜோடி ஆகும் பூஜா ஹெக்டே!
Pooja Hegde Wallpaper
புதிய ரீமேக் படம் ஒன்றில் சல்மான்கான் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருந்த வீரம் திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க, பூஜா ஹெக்டே அவருக்கு இணையாக நடிக்க இருக்கிறார்.
“ பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டு பேன் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் “