பிக் அப்டேட் | ’உருவாகிறது பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்!’
Prashanth Neel Universe Is Happening Idamporul
கே.ஜி.எப் 3, சலார், ஜூனியர் என்.டி.ஆரின் பெயரிடப்படாத படம் என்று மூன்று திரைப்படங்கள் பிரசாந்த் நீல் யுனிவர்ஸை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸ் அவர்களுடன் ‘சலார்’ திரைப்படத்தில் பிசியாக இருக்கும் வேளையில், பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ் குறித்த தகவல் ஒன்று கசிந்து இருக்கிறது. கே.ஜி.எப் 3, சலார் அப்புறம் ஜூனியர் என்.டி.ஆரின் பெயரிடப்படாத படம் ஆகிய மூன்றும் பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ்சில் உருவாக இருக்கிறதாம்.
லோகேஷ் கனகராஜ்க்கு முன்னரே பிரஷாந்த் நீல் அவர்கள் யுனிவர்ஸ் ஐடியாவில் தான் கே.ஜி.எப் படத்தையே உருவாக்கியதாக தெரிகிறது. அடுத்தடுத்து பிக் ரிலீஸ்களை கையில் வைத்து இருக்கும் பிரஷாந்த் நீல் நிச்சயம் அவரின் யுனிவர்ஸ்சில் கலக்குவார் என்பதி எந்த ஐயமுமில்லை.
“ யாஷ், பிரபாஸ், என்.டி.ஆர் என்ற மூன்று மாஸ்களை ஒரே திரையில் பார்க்க முடியும் என்றால் நிச்சயம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்து இருக்கிறது “