மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணையும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்!
Priya Bhavani Shankar Again Joining With Director Hari Idamporul
இயக்குநர் ஹரி படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இயக்குநர் ஹரி அவர்களின் யானை திரைப்படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் ப்ரியா பவானி ஷங்கர். தற்போது விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் விஷால் அவர்களின் 34 ஆவது திரைப்படத்திலும் நடிகையாக ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
” தாமிரபரணி, பூஜை திரைப்படத்திற்கு பிறகு விஷால் ஹரியுடன் இணையும் மூன்றாவது திரைப்படம், நிச்சயம் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என்பதில் ஐயமில்லை “