படத்தின் 90 % முதலீட்டை நடிகர்களே எடுத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் எப்படி நல்ல படங்கள் வரும்?
படத்தின் மொத்த முதலீட்டில் அதிகபட்ச தொகைகளை நடிகர், நடிகைகளே வாங்கி கொள்வதால் தான் தமிழ் சினிமா சில காலங்களாக நல்ல படங்களை கொடுக்க முடியவில்லை என தயாரிப்பாளர் அருண் பாண்டியன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக ஒரு பெரிய நடிகரை வைத்து படத்தை தயாரிக்கும் போது, படத்தின் மொத்த முதலீட்டில் 90 சதவிகிதம் அவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் போய்விடுகிறது. மீதி 10 சதவிகிதத்தை வைத்து எப்படி தரமான சினிமா படைக்க முடியும். இது தான் கோலிவுட்டில் நடக்கிறது என்று தயாரிப்பாளர் அருண் பாண்டியன் காட்டமாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சம்பாதிக்க மட்டும் வேண்டும் என்று நினைத்தால் குப்பை படங்கள் தான் அதிகமாக வரும், சினிமாவிற்காகவேனும் என்று மனதில் நினைத்தால் இனியாவது நல்ல படங்கள் வரும். பார்க்கலாம் யார் அப்படி நினைக்கிறார்கள் என்று? “