’பிராஜெக்ட் K’ வடிவில் இன்னொரு ஆதிபுருஷ்?
Project K Is Another Adipurush Fact Here Idamporul
நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘பிராஜெக்ட் கே’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. இணையவாசிகள் இன்னொரு ஆதிபுருஷ்சா என கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகர் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் என பல நட்சத்திரங்கள் இணைவில் உருவாகி வரும் ‘பிராஜெக்ட் கே’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. கிராபிக்ஸ் ஓரளவிற்கு ஓகே என்றாலும் கூட மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு க்ளிம்ப்ஸ்சில் எதுவும் இல்லை. இன்னொரு ஆதிபுருஷ்சாக இருக்க கூடுமோ என இணையவாசிகள் புலம்ப துவங்கி விட்டனர்.
ஏற்கனவே பிராஜெக்ட் கே திரைப்படத்தின் பிரபாச் முதல் தோற்றம் வெளியாகவுமே நிறைய கிண்டல்களையும், கேலிகளையும் இணையத்தில் பார்க்க முடிந்தது. பிரம்மாண்டம் என்பதை கடந்து நல்ல கதைகளை பிரபாஸ் தெரிவு செய்தாலே ரசிகர்கள் வரவேற்பார்கள். இதை பிரபாஸ் எப்போது புரிந்து கொள்வார் என்பது தான் புரியவில்லை.
“ இதில் வேறு பிராஜெக்ட் கே என்று இருந்த படத்தின் பெயரை தற்போது Kalki 2898 AD என மாற்றி இருக்கின்றனர். 900 வருடத்திற்கு பின் நடக்கும் கதைக்களமாம். ஆனால் க்ளிம்ப்ஸ்சை பார்க்கும் போது அந்த உணர்வும் தெரியவில்லை “