முடிவடைந்தது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு!
Jailer Shoot Wrapped Idamporul
நடிகர் ரஜினி காந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. படப்பிடிப்பின் கடைசி நாளை படக்குழு மொத்தமாக கேக் வெட்டி கொண்டாடி நிறைவு செய்து இருக்கின்றனர்.
“ நெல்சன் அவர்களின் பீஸ்ட் திரைப்படம் வெகுவாக விமர்சிக்கப்பட்டிருந்தாலும் கூட, நெல்சனின் ஜெயிலர் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது வெகுவாகவே இருக்கிறது. நிச்சயம் ஒரு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் “