நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்கோளாறு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
முதல் கட்டமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு இருப்பதான உறுதி செய்யப்பட்டுள்ளது. இதயத்திற்கு இரத்த குழாய்கள் மூலம் செல்லும் ரத்தம் தடைபடுவதால் ஏற்படும் பாதிப்பு இது என்றும், விரைந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்து விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சாதாரண அறையில் வைத்தே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவர் தற்போது வரை நல்ல நலனுடன் இருப்பதாகவும் காவேரி மருத்துவமனையின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
“ வெகுவிரைவில் மீண்டு வாருங்கள் ரஜினிகாந்த் அவர்களே, கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்களின் பிரார்த்தனைகளுள் துளியாய் எங்கள் பிரார்த்தனையும் உங்களுக்காக நிச்சயம் இருக்கும் “