பிரபல ஒளிப்பதிவாளருடன் காதலை உறுதி செய்தார் ரஜிஷா விஜயன்?
Rajisha Vijayan Confirmed Her Love With Tobin Thomas Idamporul
நடிகை ரஜிஷா விஜயன் அவர்கள் பிரபல ஒளிப்பதிவாளருடன் தனது காதலை உறுதி செய்து இருக்கிறார்.
கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன், ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ் அவர்களை காதல் செய்வதாக சினிமா களத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது இருவரும் தாங்கள் இணைந்து இருக்கும் படத்தை பொதுவெளியில் பகிர்ந்து அதை உறுதி செய்து இருக்கின்றனர்.
” முன்பு எல்லாம் யாரையாவது குறித்து கிசுகிசு ஏதாவது கிளம்பினால் அதற்கென்று தனியாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பே நடக்கும். தற்போதெல்லாம் அந்த கிசு கிசுக்களை அடக்க சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ போதுமானதாக இருக்கிறது “