மீண்டும் இணையும் ராட்சசன் திரைப்பட கூட்டணி!
Vishnu Vishal And Director Ram Kumar Joining Thrid Time Idamporul
விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம் குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ ராட்சசன் கூட்டணி என்பதால் இப்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு தொற்றுக் கொண்டு இருக்கிறது. இரு வேறு ஜார்னல்களில் இரு வேறு படங்களை கொடுத்த ராம்குமார் இந்த படத்தை எந்த ஜார்னலில் கொடுக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “