’வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்?
Actor Suriya Quit From Vanangaan Movie
‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அது குறித்து சில உண்மைக் காரணங்கள் தற்போது கசிந்து இருக்கிறது.
நேற்று இயக்குநர் பாலா, ‘வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு காரணம் பாலா தரப்பே என்று சொல்லப்படுகிறது. கதைகளில் அடிக்கடி அவர் செய்த மாறுதல்களும் கால நீட்டிப்பின் காரணமாகவுமே சூர்யா விலகி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
“ சூர்யா – பாலா கூட்டணி ஏதேனும் புதுமையை செய்யும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது இந்த கூட்டணி “