புக்கிங்கில் ரெக்கார்டு படைக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர்!
Jailer Record Breaking Booking In Book My Show Idamporul
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ புக்கிங்கில் புதிய ரெக்கார்டை படைத்து இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் புக்கிங் ஒரே ஒரு தளத்தில் மட்டும், 24 மணி நேரத்தில் 2,33,000 புக்கிங்கை கடந்து இருக்கிறது. அதே நாளில் ரிலீஸ் ஆகும் எந்த இந்திய படங்களும் ஜெயிலர் புக்கிங்கின் அருகில் கூட நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்ட் 10 அன்று வெளியாக இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை புக்கிங்கை பார்க்கும் போதே தெரிகிறது. 72 வயதிலும் தனக்கான மாஸ்சை நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.
” படத்திற்காக நெல்சன் தினமும் 20 மணி நேரத்திற்கு மேலாக உழைத்ததாக கூறப்படுகிறது, யாருக்காக இல்லையெனினும் நெல்சனின் இத்தகைய உழைப்பிற்காக நெல்சன் வெல்ல வேண்டும் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் நெல்சனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் “