’லியோ’ திரைப்படத்தில் உறுதி செய்யப்பட்ட ரோலக்ஸ் கேரக்டர்!
Leo Rolex Character Confirmed Idamporul
’லியோ’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது ரோலக்ஸ் கேரக்டர்.
நடிகர் விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே LCU வகையறா என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மற்றும் பஹாத் பாசிலின் அமர் என்ற இரண்டு கேரக்டர்களும் லியோவில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
லியோ திரைப்படத்தின் சீக்ரெட்டுகள் ஒவ்வொன்றாக உடைந்து வரும் நிலையில், டீசரில் நிறைய மறைவுகளை வைத்தே, லியோ டீசரை உருவாக்க லோகேஷ் திட்டமிட்டு இருக்கிறாராம். இல்லையேல் நேரடியாக டீசர்/ டிரெயிலர் இல்லாமல் படத்தை வெளியிடவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.
“ ஒரு வேளை அப்படியே டீசர் இருந்தாலும், அதில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே வைத்து டீசரை உருவாக்க வேண்டும் என லோகேஷ் திட்டவட்டமாக முடிவெடுத்து இருக்கிறாராம் “