7 லட்சம் பார்வையாளர்களை எட்டிய ‘சபாபதி’ திரைப்படத்தின் ‘மயக்காதே மாயக்கண்ணா’ பாடல்!
Sabhapathy Mayakkathe Mayakkanna Lyrical Video Crossed 7 Laksh Views
சந்தானம் அவர்கள் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் பாடல் இணையத்தில் 7 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை எட்டியுள்ளது.
சி.ரமேஷ் குமார் அவர்களின் தயாரிப்பில், ஸ்ரீநிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைப்பில் ஸ்ரீநிசா அவர்கள் பாடி இரண்டு தினங்களுக்கு முன் வெளியான ‘மயக்காதே மாயக்கண்ணா’ பாடல் 7 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
“ ’மயக்காதே மாயக்கண்ணா’ என்று பாடியிருக்கும் ஸ்ரீநிசா, அவரின் நளின குரலில் நம்மை நிச்சயம் மயக்கி உள்ளார். சாம் சி எஸ் அவர்களின் இசையும் வேற லெவல் “