வெகு விரைவில் ’சலார்’ திரைப்படத்தின் டீசர்?
Prashanth Neel-Give-An-Update-For-Salaar-Teaser-Idamporul
நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்து இருக்கிறார்.
இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், பிரஷாந்த் நீல், பிருத்வி ராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என பிரஷாந்த் நீல் கூறி இருக்கிறார். படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கிறதாம், முக்கியமாக படம் படம் பிரஷாந்த் நீல் யுனிவர்ஸ் என்றும் கூறப்பட்டு வருகிறது.
“ லோகேஷ் கனகராஜ்க்கு முன்னரே யுனிவர்ஸ் ஐடியாவை வைத்து இருந்தாராம் பிரஷாந்த் நீல், நிச்சயம் சிறந்ததொரு யுனிவர்ஸ்சை உருவாக்கி காட்டுவார் பொறுத்து இருந்து பார்க்கலாம் “