விஜய் தேவர் கொண்டா, சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Vijay Devarkonda And Samantha In Kushi Trailer Is Out Idamporul
நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஷிவ நிர்வனா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, ஜெயராம் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 1 என்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஒரு பீல் குட் லவ் ஸ்டோரியாக தான் ட்ரெயிலரை பார்க்கும் போது புலப்படுகிறது. ஆனாலும் ஏற்கனவே தமிழ், மலையாளத்தில் வந்த பல படங்களின் சாயலும் ட்ரெயிலரில் தெரிகிறது.
“ ஷிவ நிர்வனா என்ன செய்து இருக்கிறார் என்பதை செப்டம்பர் 1 வரை பொறுத்து இருந்து பார்க்கலாம் “