நடிகை சமந்தா 2017இல் தான் காதலித்த, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்தார்.நாக சைதன்யா பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனாகும். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சமந்தா தன் பேருக்கு பின் இருந்த “அக்கினேனி” எனப்படும் நாகார்ஜுனாவின் குடும்பப் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இதைவைத்து இவர்களது திருமணத்திற்கு ஏதோ பிரச்சனையோ சீக்கிரம் விவாகரத்து குறித்த தகவல் வரலாம் என்று பலர் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு சமந்தா தன் வாழ்த்துக்களை, தெரிவித்து விட்டு அவரை “மாமா” என குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ரசிகர்கள் இந்த வதந்திகள் வெறும் வதந்திகளே, சமந்தாவும் நாக சைதன்யாவும் நன்றாகவே இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள்.