சசிகுமார் நடிக்கும் ’Common Man’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது!
Sasi Kumar In And As Common Man Title Teaser Is Out
சசிகுமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Common Man’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
செந்தூர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சத்ய சிவா அவர்களின் இயக்கத்தில், சசிகுமார், ஹரி பிரியா, விக்ராந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Common Man’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ சுப்பிரமணியபுரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன் இந்த படங்களுக்கு பிறகு சசிகுமார் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் மீண்டும் பழைய பார்முக்கு வருவார் என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம் “