‘செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகிறது!
Selfie Movie Padippu Thevayilla Lyrical Video Is Out From Today
ஜி.வி.பிரகாஷ்சின் ‘செல்பி’ திரைப்படத்தில் இருந்து ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பே தேவையில்ல’ என்ற பாடலில் லிரிக்கல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
“ எப்படியும் வருடத்திற்கு 4 அல்லது 5 படங்கள் நடித்து விடுகிறார் ஜி.வி. பிரகாஷ், அதில் ஒன்று இரண்டு தான் தேறுகிறது. நடிப்பதாய் இருந்தால் நல்ல படங்களை மட்டும் தேர்ந்து எடுத்து நடிக்கலாம். இல்லை எனில் தனக்கான முழுத்திறமையை இசையினில் காட்டி விடலாம் ”