செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாணி காயிதம்’ டீசர் வெளியாகி இருக்கிறது!
Saani Kayidham Movie Teaser Is Out
இயக்குநர் செல்வராகவன் முழு நீள கதையில் நடிகராக களம் இறங்கி இருக்கும் ‘சாணி காயிதம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ராக்கி திரைப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாணி காயிதம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. திரைப்படம் மே 6 அன்று அமேசான் பிரைம் வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
“ பர்ஸ்ட் லுக் வந்த போதே படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. தற்போது வெளி வந்த ராக்கி படத்தை பார்த்ததும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் பன்மடங்காக தொற்றிக்கொண்டது. இருந்தாலும் மே 6 வரை பொறுப்போம் “