Saani Kaayidham Review | ‘ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி’
Saani Kayidham Movie Review
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைவில் அமேசான் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் ஒரு பார்வை.
ஒரு சாதாரண ரிவெஞ்ச் ஸ்டோரி தான். அதை நேர்த்தியாக சுவாரஸ்யமாக கொண்டு சேர்த்ததில் இயக்குநர் வென்று இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கின்றனர். சாம் சி எஸ் படத்திற்கேற்ப இசை அமைத்து இருக்கிறார். மொத்தத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி.
“ கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் ஒரு நடிப்பின் அரக்கி உள்ளுக்குள் இருக்கிறாள். இது போல நல்ல ஸ்டோரியை தெரிவு செய்து தொடர்ந்து நடித்தால் நிச்சயம் அவரின் மார்க்கெட் இன்னமும் உயரும் “
சாணிக்காயிதம் இடம் பொருள் மதிப்பீடு – 3.75/5