எல்லா துறையிலும் ஆணாதிக்கம் தான் இருக்கிறது – ஸ்ருதி ஹாசன்
Shruthi Hassan Recent Interview
எல்லா துறைகளிலும் ஆணாதிக்கம் தான் விஞ்சி நிற்கிறது ஸ்ருதி ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
’எல்லா துறைதனினும் ஆண்களே விஞ்சி நிற்கிறார்கள். அது சினிமா மட்டும் இல்லை அரசியல் உள்ளிட்டவையிலும் தான். நாங்கள் மேலே எழும்பினால் எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள். இதுவே பெரும்பாலான தமிழ் பெண்கள் சினிமாவில் இல்லாததற்கும் காரணம்’ என்று ஸ்ருதி ஹாசன் காட்டமாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.
“ சினிமாவில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், அரசியலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கென தனி இடஒதுக்கீடே இருக்கிறது என்பது ஸ்ருதிஹாசன் அவர்களுக்கு தெரியாது போல. தற்போது தமிழகத்தில் அரசு வேலைகளில் அதிக ஆதிக்கம் செலுத்துவது பெண்கள் தான் என்பதையும் ஸ்ருதி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் “