மீண்டும் ஷூட்டிங்குக்கு டிமிக்கி கொடுக்கும் சிலம்பரசன், காண்டில் தயாரிப்பாளர்கள்!
Again Silambarasan Properly Not Coming To Film Shoot Idamporul
மீண்டும் நடிகர் சிலம்பரசன் அவர்கள் ஷீட்டிங்குக்கு டிமிக்கி கொடுக்க ஆரம்பித்து விட்டதாக தயாரிப்பாளர்கள் தொடர்ந்து சிம்புவை சாடி வருகின்றனர்.
ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து இருக்கும் நிலையில், மீண்டும் சிலம்பரசன் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்குக்கு ஒழுங்காக வராமல் தயாரிப்பாளர்களுக்கும், படத்தின் இயக்குநர்களுக்கும் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.
“ பல கோடிகள் செலவிட்டு, பல கோடிகள் சம்பளமும் கொடுத்து, ஒரு சினிமாவை எடுக்க அவ்வளவு பாடுபட்டு வரும் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து இன்னல்கள் கொடுத்து வரும் நடிகர் சிலம்பரசனுக்கு பலதரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் “