சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!
Silambarasan TR Vendhu Thanindhathu Kaadu Teaser Is Out
சிலம்பரசன் மற்றும் கவுதம் மேனன் இணைவில் உருவாகி இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வேல்ஸ் இண்டர்நேசனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என மூவரும் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் குரலின் பின்னனியில் ஆரம்பித்து, சிம்புவின் அதிரடியில் முடிகிறது டீசர்.
“ மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிலம்பரசன் அவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது என்றே சொல்ல வேண்டும். சிலம்பரசன் – கவுதம் மேனன் – ஏ ஆர் ரகுமான் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பது டீசரிலேயே தெரிகிறது “