ஒரே ஒரு ஷாட், ஒரு முழுநீள திரைப்படம் ரெடி, கலக்கும் இயக்குநர் பார்த்திபன்!
Iravin Nizhal Official Motion Poster Is Out
ஒரே ஒரு பதிவில் எடுக்கப்பட்ட ’இரவின் நிழல்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வித்தியாசமான கதைக்களத்திற்கு பெயர் போனவர் பார்த்திபன். அந்த வகையில் ஒரே ஒரு கேரக்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஒத்த செருப்பு’ அனைவரையும் கவர்ந்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த புதுமையாக ஒரே ஒரு பதிவில் எடுக்கப்பட்ட ‘இரவில் நிழல்’ என்ற 100 நிமிட திரைப்படம் ஒன்றை உருவாக்கி கலக்கி இருக்கிறார்.
“ இந்த படம் பற்றிய முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் 1 மணி நேரம் 37 நிமிடங்கள் 43 வினாடிகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட படம் என்னும் போது, சினிமா ரசிகர்களிடையே இப்போதே ஒரு அதீத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு வந்து விட்டது “