சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறதா?
Sivakarthikeyan Ayalaan Teaser Releasing Date Announced
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இயக்குநர் ஆர். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர், சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்தநாளான நாளை (17-02) வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
“ ஒரு ஏலியன் தமிழ் திரைப்படம், அதுவும் சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.ரகுமான் என்று பெரிய பெரிய பட்டாளங்கள் இணையும் திரைப்படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது “