சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
SivaKarthikeyan Doctor Trailer Releasing From Tomorrow
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரீலீஸ் ஆகும் தேதி மற்றும் நேரம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை (25/09/21) மாலை 5 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
“ ’பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் என்பதால் ’டாக்டர்’ படத்தின் ரிலீஸ்க்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்களும் சேர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல் “