வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Siva Karthikeyan In DON
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
“ இளசுகள், சிறுசுகள் என்று ஏற்கனவே எல்லோரையும் கைக்குள் போட்டு வைத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன், என்ன படம் வந்தாலும் கொண்டாடுவதற்கு அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்கள் எந்த படத்தையும் வெற்றிப்படம் ஆக்கிவிடுவார்கள் “