பாடலாசிரியராக தான் வாங்கும் சம்பளத்தை நா.மு குடும்பத்திற்கு வழங்கி வரும் சிவகார்த்திகேயன்!
Siva Karthikeyan As Lyricists
தான் பாடலாசிரியராக வாங்கும் சம்பளத்தை எல்லாம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிப்பு, தயாரிப்பு என்று வெவ்வெறு முனைகளில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களுக்கு பாடல் வரிகளும் எழுதி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு கிடைக்கும் சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
” நடிப்பு – தயாரிப்பு – பாடலாசிரியர் என்று கோலிவுட்டில் மும்முனைகளில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கிலும் ஹீரோவாக செல்ல இருக்கிறார் என்பது கூடுதல் தகவல் “