5 தேசிய விருதுகளை அள்ளியது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று!
Soorarai Pottru Packed 5 National Award
ஒரு சிறந்த அங்கீகாரத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கொடுத்து அதன் தாகம் தீர்க்கப்பட்டு இருக்கிறது.
ஒரு சிறந்த படம் என்பது நடிப்பு, இசை, திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்திலும் முத்திரை பதிப்பது தான். அப்படி முத்திரை பதித்த ஒரு படமான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 68 ஆவது தேசிய திரைப்பட விழாவில் 5 தேசிய விருதுகளை கொடுத்து ஒரு சிறப்பு அங்கீகாரம் செய்து இருக்கிறது தேசிய அங்கீகார மேடை.
“ மண்டேலா திரைப்படமும் தனக்கான அங்கீகாரத்தை தேசிய மேடையில் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது “