படத்திற்கு முன்னதான நேர்காணல்களால் படத்தின் ரசிப்பு தன்மை குறைகிறதா?
ஒரு படம் வெளியாகுவதற்கு முன்னால் படக்குழுவினரால் நேர்காணல்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் குட்டி குட்டி தகவல்களால் படத்தின் ரசிப்பு தன்மை சற்றே குறைந்து போகிறது.
கைதி 2, விக்ரம் 3 போன்ற தகவல்கள் விக்ரம் படம் வெளிவருவதற்கு முன்னரே படக்குழுவினர் நேர்காணல்களில் உளறிக் கொட்டி விட்டனர். முக்கியமாக சூர்யா அவர்களின் கேமியோவும் கசிந்து விட்டது. இந்த குட்டி குட்டி சர்ப்ரைஸ்கள் தான் ஒரு படத்திற்கு முழு ரசிப்பு தன்மையை கொடுக்கும். இனியாவது படத்திற்கு முன்னதான நேர்காணல்களை படைப்பாளிகள் தவிருங்கள்.
“ கே.ஜி.எப் 2 திரைப்படம் முடியும் போது கே.ஜி.எப் 3-க்கான ஒரு குட்டி அறிவிப்பு வரும். படத்தின் பிஜிஎம்-ஓடு அந்த சீன் வருகையில் தியேட்டரே அலறியது. காரணம் அது ரசிகன் எதிர்பார்க்காத ஒன்று. அப்படி தான் சர்ப்ரைஸ்கள் சர்ப்ரைஸ்களாகவே இருக்க வேண்டும் என்பதே ஒரு சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பு “