வெளியானது ’சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!
Suriya 42 Big Update Idamporul
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக 10 மொழிகளில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி ஏப்ரல் 16 அன்று 9:05 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ சூர்யா ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்து இருந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் இணையத்தில் ஹேஸ்டாக்குகளை ட்ரென்டிங்கில் தெறிக்க விட்டு வருகின்றனர் “