Suriya 42 | ‘வெகுவிரைவில் துவங்க இருக்கும் சூர்யா – சிவா படப்பிடிப்பு’
Suriya 42 Announcement
நடிகர் சூர்யாவின் 42 ஆவது படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ’சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகையாக திஷா பட்டானி தேர்வு செய்ய இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தீடீரென்று விமானி, திடீரென்று ஒரு கிராமத்து கதாபாத்திரம், திடீரென்று வக்கீல் என்று ஒவ்வொரு படத்திற்கும் அப்படியே அப்பட்டமாக மாறி நடிக்கிறார் சூர்யா. வெர்சேட்டில் என்பதன் அர்த்தமாகவும் இருக்கிறார் சூர்யா “