நடிகர் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
“ இப்படத்தில் சூர்யா சமூகத்தில் நடக்கும் அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு குரலாக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை ரியலாகவும் அவரின் குரல் ஒலித்திருக்கிறது. இப்படமும் எங்கும் ஒலிக்கும் “