ஒரு காலத்தில் பிரபாஸ் நண்பர், தற்போது அவர் பிரபலம் – தமன்னா
Tamannah Bhatia About Prabhas Idamporul
ஒரு காலத்தில் நடிகர் பிரபாஸ் எனது நெருங்கிய நண்பர், ஆனால் தற்போதெல்லாம் பிரபலம் ஆகி விட்டார் என நடிகை தமன்னா பிரபாஸ்சை சாடி இருக்கிறார்.
சாதாரணமாக இருக்கும் போது நெருங்கிய நண்பராக இருந்தார் நடிகர் பிரபாஸ், தற்போது பெரிய பெரிய படங்களில் கமிட் ஆகி பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டதால் தற்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. அவர் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை என தமன்னா பிரபாஸ்சை சாடி இருக்கிறார்.
“ எந்த நிலையில் இருந்தாலும் பழைய நண்பர்களை மறக்க கூடாது, நானெல்லாம் அப்படி தான், அன்று எனக்கு நண்பர்களாக இருந்தவர்கள் இன்றும் எனக்கு நண்பர்கள் தான் எனவும் தமன்னா பேட்டியில் கூறி இருக்கிறார் “