ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம்!
Director Vinoth Raj Film Koozhangal Nominated For Oscar
அறிமுக இயக்குநர் வினோத் அவர்கள் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
வருடா வருடம் இந்திய திரை உலகில் இருந்து ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்படும். அந்த வகையில் மண்டேலா மற்றும் கூழாங்க்ல் என்ற இரண்டு தமிழ் படங்கள், பரிந்துரைக்கான தேர்வுக்கு சென்றது. இயக்குநர் ஷாஜி என் காருண் தலைமையிலான குழு இந்தியா முழுக்க வந்த 14 திரைப்படங்களில் ‘கூழாங்கல்’ திரைப்படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்கு தெரிவு செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினோத் ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் ஜூரிகள் வாக்குகளை பெரும் பட்சத்தில் ஆஸ்கரை எதிர்பார்க்கலாம்.
“ வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்திற்கு அப்புறம், நீண்ட காலத்திற்கு பிறகு ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்றிருக்கும் ஒரு தமிழ்படம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது ‘கூழாங்கல்’ திரைப்படம், படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் , உலக அரங்கில் தமிழ் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரத்தை பெற்று வாருங்கள் “