தலைவர் 169 | ‘தலைவர்-நெல்சன் கூட்டணியின் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?’
Thalaivar 169 Sivakarthikeyan Join Hands With RajiniKanth For Nelson Directorial
தலைவர் 169 திரைப்படத்திற்காக, தலைவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் அவர்களின் இயக்கத்தில், ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருக்கும் பெயரிடப்படாத அந்த திரைப்படத்தில், சிவகார்த்திகேயனும் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
“ இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து இயக்கும் திரைப்படம் சமீப காலங்களில் சினிமாவில் சாதாரணமாகி வரும் நிலையில் கோலிவுட்டிலும் அந்த நிலை வந்திருப்பது சினிமாவின் ஒரு நேர்மறையான போக்கினை குறிக்கிறது “